உடலுறவு கொள்ள 25 லட்சம் ரூபா சம்பளம்

புதுச்சேரியின், மாஹே பகுதியானது கேரள மாநிலத்தையொட்டி உள்ள பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பு அருகே விருந்தினர் மாளிகை நடத்தி வருகிறார். இவரிடம் நேபாளத்தை சேர்ந்த சஜன்பட்ராய் (வயது – 34) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

சஜன்பட்ராயின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தான் கருத்தரிப்பு மையம் நடத்தி வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

குறித்த கருத்தரிப்பு மையத்துக்கு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உடலுறவு வைத்து கருத்தரிக்க உதவினால் வருடத்துக்கு ரூ 25,00,000 லட்சம் சம்பளமாக தருவதாகவும் முன்பணமாக ரூ 2,00,000 தருவதாக கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய சஜன்பட்ராய் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வேலையில் சேருவதற்கு பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார். பணம் செலுத்த க்யூஆர் கோட் அனுப்பியுள்ளார்.

சஜன்பட்ராயின் அந்த க்யூஆர் கோட்-டை ஸ்கேன் செய்து ரூ 49,500 அனுப்பியுள்ளார். தன்னிடம் இருந்த பணம் மொத்தத்தையும் அவர் அனுப்பியதால் செலவுக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது உரிமையாளரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் எதற்கு பணம் என விசாரித்த போது இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. மேலும் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீஜித் மாஹே பொலிஸில் புகார் அளித்தார். பொலிஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மோசடி வழக்கு பதிந்து ஆன்லைன் மூலம் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.