உடன் அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு – மேலதிக இணைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே இன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

மேலும், களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள்

கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கெசல்வத்த
டம் வீதி
வுல்ப்எண்டால் வீதி
கோட்டை
மருதானை
மாளிகாவத்தை

கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவு
கொழும்பு துறைமுகம்
முன் கரை வீதி
மோதர
கொட்டாஞ்சேனை
மட்டக்குளி
புளுமெண்டல்
கிராண்ட்பாஸ்
தெமட்டகொட

கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவு
கொள்ளுப்பிட்டி
பம்பலப்பிட்டி
கிருலப்பனை
வெள்ளவத்தை
நாரஹேன்பிட்டி
பொரளை
கறுவாத்தோட்டம்

நுகேகொட பொலிஸ் பிரிவு
மிரிஹானா
மஹரகம
பொரலஸ்கமுவ
வெல்லம்பிட்டிய
தலங்கம
வெலிக்கடை
நவகமுவ
முல்லேரியாவ
ஹோமாகம
கொட்டாவ
அதுருகிரிய
பாதுக்கா
ஹன்வெல்ல
கோதடுவ
மீபே

கல்கிசை பொலிஸ் பிரிவு
கல்கிசை
பிலியந்தலை
அங்குலானா
தெஹிவளை
கொகுவெல
மொரட்டுவ
கஹதுடுவ
மொரட்டுமுல்ல
எகொட உயன