உச்சம் தொட்ட செவ்விளநீரின் விலை

கொழும்பு பகுதிகளில் செவ்விளநீர் மற்றும் தோடம்பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தோடம்பழம் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளமையினால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய செவ்விளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்த வாரம் கொழும்பில் தோடம்பழம் பழம் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.