உக்ரைன் போரில் 90 சிறுவர்கள் உட்பட 1,035 பொதுமக்கள் பலி

உக்ரைன் போரினால், 90 சிறுவர்கள் உட்பட 1,035 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,650 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துமாயின், நேட்டோ அதற்குப் பதிலளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அதேநேரம், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை ஜி-20 அமைப்பில் இருந்து நீக்குவதை அமெரிக்கா விரும்புவதாகவும், இந்தோனேஷியா மற்றும் பிற நாடுகள் ரஷ்யாவை நீக்குவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.