இ.தொ.கா – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மலையகப் பல்கலைக்கழகம், தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம், உதவி ஆசிரியர் நியமனம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.