இ.தொ.கா தேசிய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக்கூட்டம் எனது தலைமையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் கொட்டகலை CLF வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட உயிரிழந்த கட்சி செயற்பாட்டாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் காங்கிரஸின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெற்றன.
இதன்போது இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதன்பின்னர் பிரதி தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்படி பிரதித் தலைவர்களாக மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜ் மற்றும் அனுசியா சிவராஜா ஆகியோர் தெரிவாகினர்.
பிரதித் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரையும், தேசிய அரசியல் அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேலும், தொழிற்சங்க பிரிவு தேசிய அமைப்பாளராக லோகதாஸ் மற்றும் பிரதி பொதுச்செயலாளராக செல்லமுத்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் பிரிவு உதவி தேசிய அமைப்பாளராக ராஜமணி பிரசாந்தும், தொழிற்சங்க பிரிவு உதவி தேசிய அமைப்பாளராக பழனி சசிக்குமாரும் தெரிவுசெய்யப் பட்டுள்ளனர்.
காங்கிரஸின் போசகர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் சிவராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உப தலைவர்களாக, பிலிப்குமார், யோகராஜ், செண்பகவள்ளி, சச்சிதானந்தன், அசோக்குமார், சிவலிங்கம், பாரத் அருள்சாமி, சிவஞானம்,
பாஸ்கரன், மார்கட் மேரி, ராஜமணி, செல்லசாமி திருகேதீஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்