இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் பலி

இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் 2 ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில், இஸ்ரேல் எந்தவித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.

அதேநேரம், காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 மனிதாபிமான உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.