இலங்கையில் புதிய பரிவர்த்தனை முறை அறிமுகம்

இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கையெழுத்திடும் நிகழ்வில் இரண்டு நாட்டு தலைவர்களும் இணையத்தின் ஊடாக இணைவார்கள், மேலும் இலங்கையில் இந்த தொழில்நுட்ப அறிமுகம் சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.

UPI என்பது நேசனல் பேமெண்ட்ஸ் கோர்ப்பரேஷன் ஓஃப் இந்தியா (NPCI) உருவாக்கிய உடனடி நிகழ்நேர கட்டண முறையாகும். இது, வங்கிகளுக்கு இடையில் மற்றும் தனியாட்களுக்கு வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது என அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐஐடி மெட்ராஸ், இலங்கையில் ஐஐடி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.