இலங்கையில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம்

இலங்கையில், இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வலயம் யாழ்ப்பாணம்இ மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும்இ செப்டம்பர் மாதம் 02ம் திகதி கொண்டாடப்படும் உலக தெங்கு தினத்தை முன்னிட்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த தெங்கு முக்கோண வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்