இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயார்

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் (Hartwig Schafer)  இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாரென தெரிவித்துள்ளார்.

எனவே, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்விக்கு அவசர உதவியை வழங்க உலக வங்கி தயாராக உள்ளது என உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் தெரிவித்துள்ளார்.