இலக்கத்தகடு இல்லாத மோட்டர் சைக்கிள்களால் பரபரப்பு

பாராளுமன்றத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை  வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இராணுவ வீரர்கள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளின் பணிப்பாளரின் வழிகாட்டலின் பேரில்  பாராளுமன்ற வளாகத்தின் வீதி நுழைவாயிலை வந்தடைந்தது.

இதன்போது, இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள்களில் இலக்கத்தகடு இல்லாததன் காரணமாக, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதல் சம்பவமாக மாறியிருந்தது.