இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்-

துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இன்று இடம்பெற்று வருகிறது.

இன்று அதிகாலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் டீசலானது, ஒவ்வொரு வாகனங்களுக்கும் தலா 5000 ரூபாய் வீதமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.

இதே வேளை வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது வாகனங்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு, அதே நேரத்தில் இராணுவத்தினராலும் வாகன இலக்கத்தகடுகள் பதியப்பட்ட பின்னரே வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றிருந்தன

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை எனும் பதாகை கடந்த இரு நாட்களாக காணப்பட்ட போதும் மண்ணெண்ணை விநியோகமும் ஒரு குடும்ப அட்டைக்கு தலா 500 ரூபாய் வீதமே வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.