இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் 313.92 ரூபா, விற்பனை விகிதம் 328.75 ரூபா ஆக பதிவாகியுள்ளது

யூரோ மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்த அதே வேளையில்,  ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.