ஆறரை மணிநேரம் மின்துண்டிப்பு

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதன்படி A முதல் L வரையான வலயங்களில் முற்பகல் 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையில் சுழற்சி முறையில் 4 மணிநேரம் மின்துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிற்பகல் 5 மணிமுதல் இரவு 10 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் B முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 10 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 4 மணிநேரமும்

மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் cc1 வலயத்தில் காலை 6 மணிமுதல் இரவு 9.30 வரையான மூன்றைரை மணிநேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை உடனடியாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் அவசியம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.