இந்திய தேசிய‌ லீக்கின் மாநில‌ செய‌லாள‌ர் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ருடனான சந்திப்பு

-அம்பாறை நிருபர்-

இல‌ங்கைக்கு விஜ‌ய‌ம் செய்துள்ள‌ இந்திய தேசிய‌ லீக்கின் மாநில‌ செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌த் கான் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்களின் இருப்பு மீள் குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்கால தேர்தல் நிலைமைகள் முஸ்லீம் கட்சிகளின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய காங்கிரஸ் கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்திய தேசிய‌ லீக்கின் மாநில‌ செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌த் கான் கடந்த காலங்களில் ச‌மூக அர‌சிய‌ல் சேவையில் சிறப்பாக செயற்பட்டமைக்காக ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இத‌ன் போது மௌல‌வி முஹ‌ம்ம‌த் ச‌தீக் முப்தியும் க‌ல‌ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.