இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன்?
இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக கேட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை இரண்டு தரப்புகள் இன்று உறுதி செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது 70 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான பணத்தை செலுத்த முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கி வருகிறது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்கனவே அத்தியவசிய பொருட்கள், மருந்து மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் இருந்து 1.4 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.