இணக்கப்பாடின்றி முடிவடைந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்த நிலையிலும் எவ்வித இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த சந்திப்பில் இடைக்கால அரசாங்கம் குறித்து முக்கியமான எதுவும் பேசப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பேணுவதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் எவ்வாறாயினும், மேலதிக கலந்துரையாடலுக்காக மீண்டும் சந்திப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.