
ஆற்றில் குளிக்கச் சென்ற நால்வரை காணவில்லை
பிடபெத்தர, உடஹ எல்ல, நில்வலா ஆற்றில் இன்று மாலை வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிதிகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் இவர்கள் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டு ஆற்றில் குளிப்பதற்குச் சென்ற போதே காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிடபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி