ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.