ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்

பின்லாந்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் ஒரு பிள்ளை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறார்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்லாந்தின் வன்ட்டா நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் சிறார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் சிறுவர் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.