ஆண்கள் செய்துகொள்ள வேண்டிய உடல் பரிசோதனைகள்..!
நமது வாழ்வில் ஆரோக்கியமான உணவுஇ தினசரி உடற்பயிற்சி என்று கட்டுக்கோப்பு மிகுந்த வாழ்வியல் முறையை கையாண்டாலும்இ எதிர்பாராத விதமாக சில நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதை மறுத்துவிட முடியாது. இதைத் தடுப்பதற்கும்இ ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கும் அவ்வபோது சில உடல் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
குறிப்பாக ஆண்களைப் பொருத்தவரையில் ஆண்டுதோறும் 5 விதமான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
வருடாந்த உடல் பரிசோதனை : ஒவ்வொரு ஆணும் அடிப்படையாக செய்து கொள்ள வேண்டிய பரிசோதனை இதுவாகும். உங்கள் மருத்துவ பின்னணியை சீராய்ந்து பார்ப்பது, உங்கள் உடல் உள் உறுப்புகளை அளவீடு செய்தல் மற்றும் ஒட்டுமொத்த உடலையும் பரிசோதனை செய்வது போன்ற நடவடிக்கைகளை மருத்துவர் மேற்கொள்வார். உங்கள் இதய நலன், நுரையீரல் செயல்பாடு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் உள்ளிட்ட அனைத்தையும் உங்கள் மருத்துவர் பரிசோதனை செய்வார்.
விதைப்பை புற்றுநோய் பரிசோதனை : ஆண்களை வெகுவாகப் பாதிக்கக் கூடிய புற்றுநோய்களில் ஒன்றாக விதைப்பை புற்றுநோய் உள்ளது. குறிப்பாக 50 வயதை எட்டுபவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இந்தப் பரிசோதனை அவசியமாகிறது. விதைப்பைக்கான ஆண்டிஜன் பரிசோதனை மற்றும் டிஜிட்டல் ரெக்டல் பரிசோதனை ஆகியவற்றை மருத்துவர் மேற்கொள்வார். இவ்வாறான பரிசோதனையில் புற்றுநோய் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால், அதற்கு வெற்றிகரமான சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
மலக்குடல் புற்றுநோய் பரிசோதனை : ஆண்களை மிக அதிகமாக பாதிக்கக் கூடிய நோய்களில் இதுவும் ஒன்று. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே மலக்குடல் புற்றுநோய் கொண்டவர்களை உறவினர்களாக உடைய குடும்பப் பின்னணி உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த பரிசோதனை மிக அவசியமாகும். கொலோனோஸ்கோபி பரிசோதனை மூலமாக ஒட்டுமொத்த மலக்குடல் பாதையும் சரி பார்க்கப்படும். அதேபோல இரத்த பரிசோதனை அல்லது மலத்தில் டிஎன்ஏ பரிசோதனை போன்றவற்றையும் மருத்துவர் மேற்கொள்வார். நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உயிர் அபாயத்தை தடுக்கலாம்.
இரத்த அழுத்த பரிசோதனை : உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் எனும் பிரச்சினை காரணமாகவே இதய நோய்கள் உண்டாகின்றன. அனைத்து வயது ஆண்களுக்கும் வாடிக்கையாக இரத்த அழுத்த பரிசோதனை செய்வது அவசியமாகும். உயர் இரத்த அழுத்த அறிகுறிகளை கண்டறியாமல் அலட்சியம் செய்யும் பட்சத்தில் பல்வேறு விதமான நோய்களை எதிர்கொள்ள நேரிடும். உரிய சமயத்தில் இதனை கண்டறியும்போது வாழ்வியல் மாற்றங்கள், மருந்துகள் போன்றவற்றின் மூலமாக இதற்கு தீர்வு காண முடியும்.
கொலஸ்ட்ரால் லெவல் : இன்றைய காலகட்டத்தில் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு அடிப்படை காரணமாக அமைகின்ற கொலஸ்ட்ரால் அளவுகளை போதுமான கால இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியமாகிறது. குறிப்பாக இதயத்தில் அடைப்பை ஏற்படுத்துகின்ற எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்புகள் மற்றும் டிரைகிளைசரைடுகள் போன்ற அளவுகளை கண்டறிந்து அவை மிகுதியாக இருப்பின் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5 விதமான உடல் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலமாக ஆண்களின் நல வாழ்விற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள முடியும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்