ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு : நாளை போராட்டம்
-யாழ் நிருபர்-
வடமாகாண ஆசிரியர் இடமாற்றத்தை போது இடம்பெற்ற முறைகேடுகளுக்கு நீதிகோரி நாளை வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது.
வடமாகாண கல்விப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு இருப்பதாக தெரிவித்தே குறித்த போராட்டம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளது.