ஆசிரியை ஒருவரை துஷ்பிரயோகம் செய்த அதிபர்

கம்பஹா மினுவாங்கொடை பகுதியில் ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தனியார் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பாடசாலை நேற்று திங்கட்கிழமை மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான ( வயது – 60 ) அதிபர், விசேட கடமையின் நிமித்தம் குறித்த (வயது – 22 ) ஆசிரியரை பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.

உரிய அறிவிப்பை தொடர்ந்து, குறித்த ஆசிரியை நேற்று மதியம் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

அதன்போது, குறித்த ஆசிரியைக்கு அதிபரால் வழங்கப்பட்ட பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் போது சந்தேகநபரான அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் குறித்த ஆசிரியர் வழங்கிய முறைப்பாட்டினடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மினுவாங்கொடை பொலிஸாரினால் சந்தேகநபரான அதிபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்