அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

“ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நோக்கமாகும்.

இரண்டாம் கட்ட விண்ணப்பம் ஆரம்பிக்கப்பட்ட பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் நேற்று செவ்வாய் கிழமை வரை சுமார் 30,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 8,750 விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் இணையம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.