அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் ‍பெண்ணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் பகுதியை சேர்ந்த சின்னத்துரை ஜெகதீஸ்வரி (வயது – 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில்இ மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.