அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கி கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அறிவிப்பு

-கல்முனை நிருபர்-

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் 20வது அரசியலமைப்புத் திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு போன்றவைகளுக்கு மாத்திரம் தான் நான் ஆதரவை வழங்கியிருந்தேன்.

ஆனால் இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன்.

எனது கட்சியின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்) தீர்மானத்திற்கு கட்டுப்பட்டதுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், எரிபொருள் இல்லாமை, எரிவாயு இல்லாமை, மருந்துகள் தட்டுப்பாடு, அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களுக்காக இத்தீர்மானத்தினை எடுத்துள்ளேன், என 20க்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.