அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்கு விஜயம்

கிளிநொச்சி முகமாலை மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு அமெரிக்காவிலிருந்து கொடையாளர்களால் நிதியுதவி வழங்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்பணியின் முன்னேற்றங்கள் தொடர்பில் தொடர்ந்து கள ஆய்வினை மேற்கொள்வதற்காக  குறித்த குழுவினர் வருகை தந்திருந்தனர்.

முகமாலை மேற்கு பகுதியில் டாஸ் (DASH) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடியகற்றும் மனிதாபிமான பணியினை பார்வையிட்டனர். இதன்போது அப்பகுதியில் மீட்கப்பட்டு வரும் ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பிலும் அதனை அகற்றுவதில் ஏற்படுகின்ற சவால்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கொடையாளர்கள் மற்றும், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.