அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபயவின் மகனின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஊடகவியலாளரான ஜமீலா ஹுசைன், தனது ட்விட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.