
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடல்
-அம்பாறை நிருபர்-
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியான சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவதற்கு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தீர்வினை பெற்றுத் தர முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தனியார் விடுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
அம்பாறை மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக பல்வேறு கலந்துரையாடல்களை பல கட்டங்களில் எம்மால் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ரீதியான பிரச்சனை MN சம்பளக் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தொழில் கடமை ரீதியான விடயங்கள் மேலும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியான சேவைப் பிரமானக் குறிப்பை உருவாக்குதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உதவ முன்வர வேண்டும், என்றார்.
இச் செய்தியாளர் சந்திப்பில் அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சட்டத்தரணி அனுராத செனவிரத்தன,செயலாளர் வசந்த லங்கதிலக்க, தேசிய இணைப்பாளர் துமிந்த கண்டம்பி,அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் ,செயலாளர் எம்.ஐ.எம் இஹ்லாஸ்,இணைப்பாளர் எல்.எம் சர்ஜுன் உட்பட மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.