அன்னையர் தின கவிதைகள்

“உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை.

அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை!

உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை.”

சில நாடுகள் வெவ்வேறு திகதிகளில் இந்நாளைக் கொண்டாடினாலும் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

💕இரத்தத்தைப் பாலாக்கி இதயத்தில் தாலாட்டி உரத்தொன்றும் பேசாது உள்ளத்தில் பாராட்டி கரம்பிடித்தே வழிநடத்தி கண்ணுக்கும் வளர்த்தாளே அரவணைத்தே அன்பாலே அகங்குளிர வைத்தாளே!’

பள்ளிக்குச் சென்றாலும் பக்கத்தில் அவளிருப்பாள் பிள்னைக்கு முடியாதென புத்தகத்தைத் தான்சுமப்பாள் முல்லைக்குத் தேர்போலே முழுவதுமாய் அர்பணிப்பாள் தொல்வைகள் தந்தாலும் திட்டாது சிரித்தணைப்பாள்!

தேர்வுகால இரவுகளில் தேவைக்கு உணவளித்து சோர்வாவே தளர்ந்திருந்தால் சூடாக அமுதளிப்பான்!’ பார்க்கின்ற பொழுதெல்லாம். தூங்காது விழித்திருப்பாள் யார்க்குதான் கிடைக்குமிந்த.

mothers day

💕அவளது கருவில் நான் உருவான நாள் முதல் அவள் என்னை விட்டு பிரியும் தருணம் வரை என்மீது கரிசனை கொண்டிருந்தாளே என்னை விட்டு போன பின்பு எங்கே தேடுவேன் அந்த அன்பை…..

mothers day

💕என் முகம் பார்க்கும் முன்பே! என் குரல் கேட்கும் முன்பே! என் குணம் அறியும் முன்பே! என்னை நேசித்த ஓர் இதயம்! ஏன் அம்மா மட்டுமே…

mothers day

💕என்னை பெற்றெடுத்த தேவதையே! உன் அன்புக்கு இந்த உலகில் வேறெதுவும் ஒப்பிட முடியாது. என்னை பத்து மாதங்கள் உன் வயிற்றில் சுமந்து இந்த உலகிட்கு அறிமுகம் செய்தாய். தாயே! உன் பாசம் என்னும் கடலில் மகிழ்ச்சியோடு மிதந்து கொண்டிருக்கிறேன். உன் அன்பு கரங்களில் என்னை மிதக்க வைத்து மகிழ்ச்சி எனும் வானில் நீ உலா வந்தாய். அழகிய நிலவே! நீ என் மூன்றெழுத்து பொக்கிஷம் “அம்மா”.

mother day