
அனுராதபுரத்தில் வைத்தியருக்கு நேர்ந்த சோகம்: நாடு முழுவதும் வைத்தியர்கள் எதிர்ப்பு
அனுராதபுரத்தில் வைத்தியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல மயில் தூரத்தில் இருந்து பேருந்துகளில் வருகை தந்தும் அவை பலன் அளிக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.