அதிகளவில் பரவிவரும் சோம்பி வைரஸ்

வன விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வகை சோம்பி வைரஸ் பரவி வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த தொற்றானது தென் கொரியா, கனடா மற்றும் வட அமெரிக்கா நாடுகளிலேயே இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது மான்கள் மத்தியிலேயே அதிகளவில் பரவி வருவதாகவும் மனிதர்களுக்கு மத்தியில் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதா இல்லையா என்பது தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நோய் காரணமாக விலங்குகளின் மூளைக்கு செல்லும் நரம்புகள் செயலிழக்கப்படுவதுடன், வயிற்றுப்போக்கு மற்றும் அவை உயிரிழப்பதற்கான சாத்தியமும் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.