அதிகளவான துறைசார் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்

நமது நாட்டில் வெறும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே உள்ளது. அரசாங்கம் தமது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப மாணவர்களை இணைத்து கொன்டாலும் ஏனைய மாணவர்கள் தாம் விரும்புகின்ற துறையில் கல்வி கற்க தனியார் கல்லூரிகள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கின் கேடயம் பிரதானியும் அக்கறைப்பற்று மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

நிந்தவூரில் இயங்கும் Stanford கல்லூரியில் புதிய கற்கைநெறிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஐக்கிய அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் இன்று 1000 மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் 6000ம் மேற்பட்ட இலாப நோக்கமற்ற மற்றும் இலாப நோக்கமுடைய கல்லூரிகளும் இயங்குகின்றன. அவர்களுக்கு தேவையான பட்டதாரிகளை, உயர்தரமான ஆராய்ச்சியாளர்களை, சட்டத்தரணிகளை, வைத்தியர்களை இவைகள் உருவாக்குகின்றது.

கல்லூரிகளில் மாணவர்கள் குறைவாகவும் தமது பேராசிரியருடன் அருகில் உரையாடக்கூடிய வாய்ப்பையும் குறுகிய காலத்துக்குள் பட்டப்படிப்பினை நிறைவு செய்யக்கூடிய சந்தர்பங்களையும் வழங்குகின்றது.

இதனால் தொழில் சந்தைக்கு தேவையான ஆளணிகளை உருவாக்ககக்கூடிய சந்தர்பம் கிடைப்பதோடு அனைத்து மாணவர்களும் தொழில் திறமையுடையவர்களாக உருவாகும் சந்தர்பமும் கிடைக்கின்றது

வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் உயர் ஆராய்ச்சி செய்வதனையும், சட்டப்படிப்பு வைத்தியத்துறை மற்றும் நான்கு வருட பாடநெறிகளே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.

ஆனால் இலங்கையில் உயர்கல்வி என்றால் பல்கலைக்கழகம் மாத்திரமே முன்தெரிகின்ற முறையாக காணப்படுகின்றது. அதே நேரம் அங்கே கல்வி பயின்றால் மாத்திரமே படித்தவர்கள் என்ற விம்பத்தோடும் சிலர் வெளிவருகின்றனர்.

இந்நிலை மாற்றம் பெற்று தனியார் கல்லூரிகள் அதிகம் உருவாக்கப்பட்டு அதனை அரசு முறையாக பரிசீலித்து உறுதிப்படுத்துவது அவர்களின் கடமையாகும். அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களை இலங்கைக்குள் உள்ளீர்க்கும் அதேநேரம் எமது மாணவர்கள் அதிக பணம் செலவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று கல்விகற்கவேண்டிய தேவையும் ஏற்படாது

இம்முறைகளை கையாண்டு கடந்த இரண்டுவருடங்களாக இயங்கி வெற்றிபெற்றுள்ள Stanford கல்லூரி தொடர்ந்தும் இப்பகுதி மாணவர்களுக்கு சிறப்பான கல்விச்சேவை வழங்கிடவும் சகல துறைகளில் மிளிரவும் பிரார்த்திக்கின்றோம் என தெரிவித்தார்