வீதியை புனரமைத்து தருமாறு மஹதோவ தோட்ட மக்கள் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பசறை மடுல்சீமை வீதி மாதோவ சந்தியில் இருந்து மாதோவ கீழ் பிரிவின் ஊடாக லுணுகலை செல்லும் சுமார் 7 கிலோமீட்டர் வரையிலான வீதியை புனரமைத்து தருமாறுநேற்று மஹதோவ கீழ் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வீதியை புனரமைத்து தருவதாக கூறி பல அரசியல் வாதிகள் அடிக்கல் நாட்டிய தாகவும், ஆனால் இதுவரை வீதி புனரைமைத்து தரவில்லை என்று அங்கு இருக்கும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 200 மேற்ப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்