ஃப்ரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 20 சதவீதத்தால் அதிகரிப்பு

உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

அதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து, பகலுணவுப் பொதி உள்ளிட்டவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை மற்றும் உணவுகளை பொதி செய்யும் பொருட்களின் விலை ஆகியவை அதிகரித்துள்ளமையாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.