ஹரக் கட்டா வழக்கு : பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனைகள் நீதிமன்றால் நிராகரிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பராமரிக்க முடியாது என்று பிரதிவாதிகள் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க வழங்கினார்.
ஆரம்ப ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிபதி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியுமென குறிப்பிட்டார்.
குற்றப் பத்திரிகைகளை சமர்ப்பித்ததில் எந்த நடைமுறை பிழையும் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
பின்னர் வழக்கை ஓகஸ்ட் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.