ஸ்வீடனில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி
ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
நகர மத்தியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கியில் பிரவேசித்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்