ஸ்கந்தவரோதயா கல்லூரியில் நடைபெற்ற “மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” நிகழ்வு!

-யாழ் நிருபர்-

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் “மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” என்ற நிகழ்வு இன்றையதினம் சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கந்தன் ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க அவர்கள் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, தேவாரம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

பின்னர் மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நண்பர்கள் அறிமுகம், ஆசிரியர்கள் கௌரவிப்பு, விருந்தினர்கள் உரை, ஆசிரியர்கள் உரை மற்றும் பள்ளி நினைவூட்டல்கள் என்பன இடம்பெற்றன.

இதில் கல்லூரியின் முதல்வர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.