வைரலாகும் மோனாலிசா என்ற பெண்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனால், மகா கும்பமேளாவில் அவரை பேட்டி எடுக்க பல ஊடகங்களும், செல்பி எடுக்க பலரும் அலை மோதுகின்றனர்.
இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில்,
உண்மையில் இந்த புகழானது எங்களது விற்பனையை பாதித்தது. மாலைகள் வாங்குவதை விட, மகளுடன்
செல்பி எடுப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
மேலும் மேனாலிசா என்ற பெண் கூறுகையில்,
“எனது குடும்பம் மற்றும் எனது சொந்த பாதுகாப்பிற்காக நான் இந்தூருக்கு செல்ல வேண்டும். அடுத்த மகா கும்பத்திற்கு நான் மீண்டும் வரலாம். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்