தனது மனைவி ஆண் என திருமணமாகி 12 நாட்களின் பின் கண்டுபிடித்த கணவன்
இந்தோனேசியாவில் ஆணொருவர் தன்னை பெண் என அடையாளப்படுத்தி பிறிதொரு ஆணைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த திருமணம் இடம்பெற்ற 12 நாட்களின் பின்னர், தனது மனைவி ஒரு ஆண் என கணவன் கண்டறிந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதான கணவன், தனது மனைவி ஆதிண்டா கன்சாவை ஒரு பெண் என நினைத்தே திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த 2023ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தின் ஊடாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் முதன்முதலாக சந்திக்கும் போதும் கூட ஆதிண்டா, தனது முழு முகத்தையும் மறைக்கும் பாரம்பரிய இஸ்லாமிய உடையை (பர்தா) அணிந்திருந்ததாக குறித்த கணவன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு நாள் கூட ஆதிண்டாவை வேறு உடைகளில் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இறுதியில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதன்படி இம்மாதம் 12ஆம் திகதி அனைவரின் ஆசிர்வாதத்துடனும் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
எனினும் திருமணத்தின் பின்னர் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆதிண்டா கன்சா, ஒரு ஆண் என்பதை குறித்த கணவன் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன், ஆதிண்டா கன்சா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்