
வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதம், மிக அருகில் வந்துகொண்டிருக்கும் போது, வவுனியா தாண்டிக்குளம் புகையிரத கடவையினை, புகையிரத சமிக்கையை மீறி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடந்துள்ளார்.
இதன்போது, அவர் புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த, அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது – 52) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
