வாகன கொள்வனவில் அதிக நாட்டம்
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 73,400 இற்கும் அதிகளவான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உந்துருளிகளே அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை 58,947 எனவும் அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், 7,500 சிற்றூந்துகளும்(minibus), ஆயிரத்து 666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதமே அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.