
வரி விதிப்பை ஒத்தி வைக்க ட்ரம்ப் தீர்மானம்
கனடா மற்றும் மெக்சிகோ மீதான 25 சதவீதம் வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் விதமாக, கனடா அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரிகளை விதித்திருந்தது.
தற்போது அதை மாற்றும் எண்ணம் இல்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.