வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பயிற்சிப் பணியாளர்களுக்கான நிரந்தர நியமனம்
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிந்துவரும் 3,451 பயிற்சிப் பணியாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு இலட்சம் பல்நோக்கு அபிவிருத்தி பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தியினால் 50 பணியாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மனித – யானை மோதலை தடுப்பதற்கு நிரந்தர நியமனம் பெற்றவர்களிடம் இருந்து அதிக பங்களிப்பை எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
மனித – யானை மோதலை தடுப்பதற்கு நாடு முழுவதும் 5,644 கிலோ மீற்றர் நீளமுள்ள 437 மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.