
வன விலங்குகளின் தரவுகள் இன்றி எந்த திட்டத்தையும் அமுல்படுத்த முடியாது- பேராசியரியர் நிலந்த லியனகே
வன விலங்குகளின் தரவுகள் இன்றி எந்த திட்டத்தையும் அமுல்படுத்த முடியாது என ருஹுணு பல்கலைகழக விவசாய பீடப் பேராசியரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள விலங்குகள் கணக்கெடுப்புக்கு கமநல அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யானைகள், குரங்குகள், மர அணில் உள்ளிட்ட விலங்குகளால் பயிர் செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி கணக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
5 நிமிடங்களுக்கு உட்பட்ட வகையில் வீட்டுத் தோட்டம், புனித பூமி, பயிர் செய்கை நிலம் உள்ளிட்டவற்றில் குரங்கு, மர அணில் மற்றும் மயில் போன்ற உயிரினங்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அந்த கணக்கெடுப்பு, மதிப்பாய்வு பத்திரத்தில் குறிக்கப்பட வேண்டும் எனவும் வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.