
வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து- ஒருவர் படுகாயம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பிரதான வீதியில் வேகமாக வந்த கனரக வாகனம் முன்னால் சென்ற டிப்பர் வண்டியை கடக்க முற்படும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தூணில் மோதுண்டு இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கனரக வாகனத்தில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
