லிப்ட் இடிந்து விழுந்து இளைஞர் பலி
கொழும்பு – மொரட்டுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், ஹோட்டலின் உள்ளக பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் லிப்ட் இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்ததாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை, அருக்கொட பகுதியைச் சேர்ந்த ரவிந்து பீரிஸ் (வயது – 19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நான்கு மாடிக் கட்டடமாக உள்ள குறித்த ஹோட்டலின் மேல் மாடிக்கு கோப்பைகள் மற்றும் தட்டுகளை எடுத்துச் சென்றபோதுஇ லிப்ட் அவர்மீது இடிந்து விழுந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.