ரஷ்ய – உக்ரைன் போரில் 8 இலங்கையர்கள் பலி
ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக மனித கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதுடன் இவர்களில் ரஷ்யாவில் 6 பேரும் உக்ரைனில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதுவரை 23 இலங்கையர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்