ரணிலின் கோரிக்கையை ஏற்றது அரசாங்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்தவேண்டும் என்றே அவர் கோரியுள்ளார்.

ரணில் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ புள்ளே, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில், ஏப்ரல் முதல்வாரம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.