யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை செயலாளர் டபிள்யு.எம்.டி.ஜே.பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

ம.பிரதீபன் 2024 மார்ச் 9 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றார்.